புதியவை :

Grab the widget  Tech Dreams

28 ஜனவரி 2010

ஒன்றரை லட்சம் லஞ்சம் , 10 ஆயிரம் ரூபாய் அட்வான்ஸ் , திருவெறும்பூர் ஏ.பி.டி.ஓ., லட்சுமி கைது .




திருச்சி அடுத்துள்ள திருவெறும்பூர் அய்யம்பட்டியைச் சேர்ந்த ஆரோக்கியம் மகள் ஜான்சிராணி (27). இவர் கடந்த சில நாட்களுக்கு முன் அதே ஊரில் செயல்படும் புனித வளவனார் உயர்நிலைப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளர் பணிக்கு விண்ணப்பம் செய்திருந்தார்.

விண்ணப்பத்தை சமூக நலத்துறைக்கு பரிந்துரை செய்த பள்ளி நிர்வாகம், அவருடைய நிலை கருதி சத்துணவு அமைப்பாளர் பணியை ஜான்சி ராணிக்கே வழங்குமாறு பரிந்துரை செய்தது.

இந்நிலையில், பணிநியமனம் தொடர்பாக திருவெறும்பூர் யூனியன் அலுவலகத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு திட்டம்) லட்சுமியை (47), ஜான்சிராணி கடந்த 27ம் தேதி சந்தித்தார். அப்போது லட்சுமி, ஒன்றரை லட்சம் ரூபாய் கொடுத்தால் தான் சத்துணவுஅமைப்பாளர் பணி கிடைக்கும் என்றுஜான்சிராணியிடம் தெரிவித்துள்ளார்.

மேலும், முன்பணமாக நாளையே 10 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டும் என்றும் லட்சுமி வலியுறுத்தினார். ஏழ்மை காரணமாக தன்னால் பணம் கொடுக்க முடியாது என்ற கூறிவிட்டு ஜான்சிராணி வந்துவிட்டார்.இதற்கு புரோக்கராக பட்டாளப்பேட்டை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி சத்துணவு அமைப்பாளர் நாகலட்சுமி (50) இருந்தார்.

இதுகுறித்து ஜான்சிராணி நேற்று காலை திருச்சி லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி., அம்பிகாபதியிடம் புகார் அளித்தார். இதையடுத்து, போலீசாரின் ஆலோசனைப்படி நேற்று மதியம் ஜான்சிராணி 10 ஆயிரம் பணத்துடன் திருவெறும்பூர் யூனியன் அலுவலகம் சென்று .பி.டி.., லட்சுமியை சந்தித்து பணத்தை கொடுத்தார். மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் பணத்தை பெற்றுக்கொண்ட லட்சுமியையும், அதற்கு உதவியாக இருந்த சத்துணவு அமைப்பாளர் நாகலட்சுமியையும் கையும், களவுமாக பிடித்துக் கைது செய்தனர்.

பின்னர் திருச்சி குற்றவியல் தலைமை நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர் .

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக