நாமக்கல் : பால் வியாபாரியிடம் லஞ்சம் பெற்ற உணவு ஆய்வாளர் மற்றும் அவரது உதவியாளர் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். நாமக்கல் அருகிலுள்ள தூசூர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல். பால் வியாபாரியான இவர், தினமும் காலையில் நாமக்கல் பகுதியில் பால் ஊற்றுவது வழக்கம். கடந்த சனிக்கிழமை, அவர் பால் வியாபாரத்திற்கு சென்ற போது, அவ்வழியே வந்த உணவு ஆய்வாளர் சுப்பையா மற்றும் அவரது உதவியாளர் பெரியசாமி ஆகியோர், சக்திவேல் கலப்பட பாலை விற்பனை செய்வதாக கூறி, அவரது பால்கேனை பறிமுதல் செய்தனர். கேனை திருப்பி அளிக்க ரூபாய் 1500 அளிக்க வேண்டும் என கோரினர். இதையடுத்து சக்திவேல், நாமக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். அவர்கள் வழிகாட்டுதலின் பேரில், சுப்பையாவின் அலுவலகம் சென்ற சக்திவேல் லஞ்சத்தை அளித்த போது, மறைந்திருந்த போலீசார் கையும் களவுமாக சுப்பையாவையும், அவரது உதவியாளர் பெரியசாமியையும் கைது செய்தனர்.
28 ஜூலை 2009
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக