நாடு முழுவதும் ஒவ்வொரு மாநிலத்துக்கும் சென்று ராணுவத்துக்கு ஆள் எடுப்பது வழக்கம். இதே போல ராஜஸ் தானில் சமீபத்தில் ஆள் தேர்வு நடந்தது. அப்போது லஞ்சம் வாங்கிக் கொண்டு ஆள் தேர்வு செய்தது தெரிய வந்துள்ளது.
தேர்வுக்கு வந்தவர்கள் பலரிடம் தலா ரூ.1 1/2 லட்சம் பெற்றுக் கொண்டு தேர்வு செய்துள்ளனர். இதில் தேர்வு குழுவில் இருந்த ராணுவ அதிகாரிகளும், உள்ளூர் போலீஸ் அதிகாரிகளும், டாக்டர்களும் சம்பந்தப்பட்டு உள்ளனர். முன்னாள் ராணுவ அதிகாரிகள் சில ரும் உடந்தையாக இருந் துள்ளனர்.
இது தொடர்பாக மாநில போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அப்போது 6 ஆண்டுகளாக இதே போன்று மோசடி நடந்து வருவது தெரியவந்தது.
தேர்வு செய்தவர்களை உடல் பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீனிவாஸ், மைத்ரேயி, பிரசாத் ஆகி யோரும் முறைகேட்டில் சம் பந்தப்பட்டு இருந்தனர்.
ஊழலில் ராணுவ அதி காரிகள் சம்பந்தப்பட்டு இருப்பதால் ராணுவ தரப்பி லும் விசாரணை நடந்து வருகிறது.
இது பற்றி ஜோத்பூர் ராணுவ ஆள் தேர்வு டைரக் டர் பாரத்குமார் கூறும் போது Òசில ஜூனியர் பிரிவு அதிகாரிகள் முறைகேட்டில் சம்பந்தப்பட்டு உள்ளனர். விசாரணையில் அவர்கள் தவறு செய்து இருப்பது தெரிந்தால் ராணுவ சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக