புதியவை :

Grab the widget  Tech Dreams

05 பிப்ரவரி 2010

காந்தி சாராயம் காய்ச்ச வற்புறுத்தினார்! லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர் .


இன்ஸ்பெக்டர் காந்தி , ஏட்டு செல்வராஜ்

துறையூர் அருகே, முன்னாள் சாராய வியாபாரியை மிரட்டி, 18 ஆயிரம் ரூபாய் லஞ்சம் வாங்கிய போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி உட்பட இருவரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.திருச்சி, துறையூர் அருகே சிங்களாந்தபுரம் தெற்கியூரை சேர்ந்தவர் அசோக்குமார். இவர், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்தார். தற்போது, அத்தொழிலை விட்டுவிட்டு, புதுச்சேரியில் போர்வெல் அமைக்கும் வேலை செய்கிறார்.

கடந்த வாரம், தன் மனைவிக்கு குழந்தை பிறந்ததை பார்க்க துறையூர் வந்தார். அப்போது, இவரை துறையூர் மதுவிலக்கு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் காந்தி, ஏட்டு செல்வராஜ் ஆகியோர் சந்தித்து, மீண்டும் சாராயம் காய்ச்சுமாறு வற்புறுத்தியுள்ளனர்.தனக்கு சாராயம் காய்ச்ச விருப்பமில்லை என அசோக் கூறியுள்ளார். இதனால், அசோக் மீது சாராயம் காய்ச்சியதாக வழக்கு போடுவதாகக் கூறி, காந்தியும், செல்வராஜும் மிரட்டினர். வழக்கு போடாமலிருக்க, இருவருக்கும் 20 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளனர். 18 ஆயிரம் ரூபாய் தருவதாக ஒப்புக்கொண்ட அசோக், இதுகுறித்து, லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

காந்தியின் பெயரை வைத்து கொண்டு இந்த அயோக்கியத்தனம் செய்யலாமா இன்ஸ்பெக்டர்?

சென்னை,மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிரடி சோதனை.



மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக வந்த புகாரையடுத்து, சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் உதவி பாஸ்போர்ட் அதிகாரி உட்பட 4 பேரும், சென்னையில் நடைபெற்ற அதிரடி சோதனையில் 3 பேரும் என 7 பேர் கைது செய்யப்பட்டனர்.

மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் பாஸ்போட்டிற்காக விண்ணப்பம் செய்பவர்களிடம் லஞ்சம் கேட்பதா கவும், லஞ்சம் கொடுக்காதவர்களுக்கு பாஸ்போர்ட் வழங்கப்படுவதில்லை என்றும், பொதுமக்களிடமிருந்து அரசுக்கு புகார்கள் வந்தது.

இதையடுத்து, சிபிஐ அதிகாரிகள் சத்தியமூர்த்தி, அன்பழகன் ஆகியோர் தலைமையில் சிபிஐ போலீசார் நேற்று மதுரையில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் அதிரடியாக சோதனை நடத்தினர். இந்த சோதனைக்குப்பிறகு உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதா பாய் (வயது 58) என்பவரை தல்லாக்குளத்தில் உள்ள மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று தீவிர விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணைக்கு பின்னர், பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாயை, கே.புதூர் ஆவின் நகர் சர்வேயர் காலனியில் உள்ள அவரது வீட்டிற்கு சிபிஐ அதிகாரிகள் அழைத்துச் சென்று சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் கணக்கில் காட்டப் படாத ரூ.2 லட்சம் மதிப்பிலான நகை மற்றும் பணம் சிக்கியதாக கூறப்படுகிறது.

இதையடுத்து, உதவி பாஸ்போர்ட் அதிகாரி கீதாபாய் மற்றும் அவருக்கு லஞ்சம் வாங்கிக் கொடுத்து உதவியதாக அதே அலுவலகத்தில் பணிபுரியும் இளநிலை உதவியாளர் துரைராஜ் (வயது 51), அன்பழகன் (வயது 57) மற்றும் புரோக்கர் இப்ராஹிம்மீரான் ஆகியோரை சிபிஐ அதிகாரிகள் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இந்நிலையில், சென்னை நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவனில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் இன்று சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகிறார்கள். மதுரை பாஸ்போர்ட் அலுவலகத்தில் நேற்று நடந்த சோதனையின் போது, கிடைத்த முக்கிய தகவலின்படி, இங்கும் சோதனை நடந்தது.இதில் பாஸ்போர்ட் அலுவலக சூப்பிரண்டுகள் இரண்டு பேர் மற்றும் புரோக்கர் ஒருவர் உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.




04 பிப்ரவரி 2010

பால் தாக்கரே , பாகல் தாக்கரே ஆகாமல் இருக்க ரவிசங்கர் யோசனை !

பால் தாக்கரேக்கு ஸ்ரீ ரவிசங்கர் அறிவுரை !

""தாக்கரே குடும்பத்தினர் தங்களின் கோபத்தை குறைத்து அமைதி பெற, வாழும் கலை பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்,'' என, ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் யோசனை தெரிவித்துள்ளார்.

வாழும் கலை அமைப்பின் நிறுவனரான ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர், இது தொடர்பாக கூறியதாவது:ஒற்றுமையாக இருப்பதே இந்தியாவின் பலம். அற்பமான பிரச்னைகளுக்காக இந்த ஒற்றுமையை சீர் குலைக்கக் கூடாது. வார்த்தைப் போர் பிரச்னைகளை சிக்கலாக்குமே அன்றி, அவற்றை தீர்க்க உதவாது. காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை ஒரே இந்தியாவாக இருப்பதையே நாம் பார்க்க வேண்டும்.

தாக்கரே குடும்பத்தினர் தங்களின் கோபத்தை குறைத்து அமைதியாக செயல்பட வேண்டும். அதற்கு வாழும் கலை அமைப்பின் பாடங்களை, பயிற்சிகளை பின்பற்ற வேண்டும்.இவ்வாறு ரவிசங்கர் கூறினார்.

தொலைபேசி கேபிள்களை திருடும் போலீஸ் எஸ்.ஐ !



திருட்டு வழக்கில் தலைமறைவாக இருந்த எஸ்.ஐ., கைது செய்யப்பட்டார்.

சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே, திருவல்லிக்கேணி போலீசார் இரு தினங்களுக்கு முன் ரோந்து சென்றனர். அப்போது, சாலையில் புதைக்கப்பட்டிருந்த தொலைபேசி கேபிள்களை மூவர் தோண்டி எடுத்துக் கொண்டிருந்தனர். சந்தேகத்தின் பேரில் அவர்களை விசாரித்தபோது, மூவரும் தொலைபேசி கேபிள்களை திருடியது தெரிந்தது.

வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த முனியப்பன்(25) முருகன்(37) ராயபுரத்தைச் சேர்ந்த சக்தி(33) ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இத்திருட்டு வழக்கில் அரசு பொது மருத்துவமனை காவல் நிலைய எஸ்.ஐ., சிட்டிபாபுவுக்கு(57) தொடர்பு இருப்பதும் போலீஸ் விசாரணையில் தெரிந்தது.
திருட்டு வழக்கில் கூட்டாளிகள் மூவர் கைது செய்யப்பட்டதை அறிந்த சிட்டிபாபு, நேற்று முன்தினம் பணிக்கு வராமல் தலைமறைவானார். அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.

திருட்டு வழக்கில் போலீஸ் எஸ்.ஐ., கைது செய்யப்பட்டிருப்பது போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தி கற்று கொடுப்பதற்கு 5,000 ரூபாய் லஞ்சம்


தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பி.எஸ்.என்.எல்., உதவி பொதுமேலாளர் ராஜேந்திரன்.

நாகபட்டினம் சத்தியப்பா திருக்குலமுடக்கை சேர்ந்தவர் இந்தி ஆசிரியர் ராமசாமி.

காரைக்கால், நாகபட்டினம் பி.எஸ்.என்.எல்., ஊழியர்களுக்கு இந்தி கற்று கொடுப்பதற்கு, அனுமதி வழங்க ராமசாமியிடம், ராஜேந்திரன் 5,000 ரூபாய் லஞ்சம் கேட்டார்.

லஞ்சம் கொடுக்க விரும்பாத ராமசாமி, சி.பி.ஐ.,யிடம் புகார் கூறினார்.நேற்று முன்தினம் ராமசாமியிடம் 5,000 ரூபாய் லஞ்சம் வாங்கியபோது, ராஜேந்திரனை சி.பி.ஐ.,யினர் கைது செய்தனர். மதுரை சி.பி.ஐ., கோர்ட் நீதிபதி ஜெகநாதனிடம் நேற்று காலை ஆஜர்படுத்தினர். ராஜேந்திரனை ரிமாண்ட் செய்து நீதிபதி உத்தரவிட்டார்.

வழிப்பறி வழக்கில் எஸ்.ஐ.,க்கு மூன்றாண்டு சிறை தண்டனை


மதுரையை சேர்ந்தவர் வக்கீல் முகமது ரபீ. இவர், 2003 மே 23ல் மேலக்கால் - துவரிமான் ரோட்டில் சுமோ காரில் டிரைவிங் பழகினார்.

அவ்வழியாக வந்த நாகமலை போலீஸ் எஸ்.ஐ., பாபு, ஏட்டு குழந்தை ஆகியோர் காரை மறித்து சோதனை நடத்தினர். பின், முகமது ரபீயிடம் இருந்த 4,100 ரூபாய், வாட்ச், மொபைல் போனை எடுத்து கொண்டதாக கூறப்படுகிறது. தட்டிக்கேட்ட முகமதுரபீ தாக்கப்பட்டார்.

எஸ்.ஐ., ஏட்டு மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, இரண்டாவது விரைவு கோர்ட்டில் முகமதுரபீ வழக்கு தொடர்ந்தார். விசாரணை நடத்திய நீதிபதி ராதா குற்றம் சுமத்தப்பட்டோரது குற்றங்கள் மனுதாரர் தரப்பில் நிரூபிக்கப்பட்டதால், எஸ்.ஐ., பாபுவுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்தும், 2,500 ரூபாய் அபராதம், 5,000 ரூபாய் நஷ்டஈடு வழங்கவும் உத்தரவிட்டார்.ஏட்டு குழந்தை விடுவிக்கப்பட்டார்.

.பாபு தற்போது தல்லாகுளம் போக்குவரத்து பிரிவில் பணியாற்றுகிறார்.

03 பிப்ரவரி 2010

1கோடி மதிப்புள்ள வலம்புரி சங்கு திருச்சியில் கொள்ளை: 6 போலீஸ்காரர்கள் கைது


திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகேயுள்ள ஆரியகோன்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் பழனியப்பன்(42). இவர் அப்பகுதியில் உள்ள விநாயகர் கோவிலில் பூசாரியாக இருந்து வருகிறார்.

இந்நிலையில் இவரிடம் ஒரு கும்பல் 1கோடி மதிப்புள்ள வலம்புரி சங்கை கொடுத்து விற்று தருமாறு கூறியுள்ளனர்.

இதைத்தொடர்ந்து பூசாரி பழனியப்பன், புதுக்கோட்டையை சேர்ந்த புரோக்கர்கள் சரவணன், ராஜாமுகம்மது ஆகியோரை அணுகி வலம்புரி சங்கை வாங்குவதற்கு ஆட்களை ஏற்பாடு செய்யுமாறு கூறினார்.

இந்நிலையில் கடந்த 24-ந்தேதி வலம்புரி சங்கை வாங்க தனித்தனியாக 3 கார்களில் மதுரை, திண்டுக்கல் பகுதிகளை சேர்ந்த 7 பேர் வந்தனர்.

பூசாரியை அடித்து போட்டுவிட்டு கொள்ளையடித்து சென்றனர் ஏழு பேரும். காரில் வந்து வலம்புரி சங்கை கொள்ளையடித்தது மாறு வேடத்தில் வந்த போலீசார் என நினைத்து பூசாரி பழனியப்பன் போலீசில் புகார் செய்தார்.

அதன் பேரில் மணப்பாறை போலீஸ் டி.எஸ்.பி. ருத்தரசேகரன் உத்தரவின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.

இதில் வலம்புரி சங்கை பார்வையிட்டு வாங்க 3 கார்களில் வந்த மதுரை புதுவிளாங்குடியை சேர்ந்த முன்னாள் போலீஸ் ஏட்டு ஜோதிவேலு(62), மதுரை பாலரெங்கபுரம் குமாரவேல்(45), சிவசுப்பிரமணியன்(53), அவரது தம்பி கண்ணன்(38), மற்றும் திண்டுக்கலை சேர்ந்த ஆர்ம்ஸ்டிராங், தர்மராஜ் ஆகிய 7 பேரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 3 காரை பறிமுதல் செய்தனர்.

பூசாரியை தாக்கி வலம்புரி சங்கை கொள்ளையடித்தது. போலீஸ் வேடத்தில் வந்த கும்பல்தான் என்று போலீசாருக்கு முதலில் சந்தேகம் ஏற்பட்டது.

விசாரணையில் வலம்புரி சங்கு கொள்ளையில் ஈடுபட்டது 6 போலீசார் என தெரிய வந்துள்ளது. இதில் 5 பேர் ஆயுதப்படை போலீசிலும் ஒருவர் வளநாடு போலீஸ் நிலையத்தில் ஏட்டாகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

கைதான ஆறு பேரும் 1. குமரேசன்(45), வளநாடு போலீஸ் நிலைய ஏட்டு, 2. சிவக்குமார்(34), 3. இன்னொரு சிவக்குமார்(35), 4. ஞானக்குமார்(35), 5. மர்மவீரன்(32), 6.எட்வின்(33), இதில் எட்வின் திண்டுக்கல் ஆயுதப்படை போலீசிலும் மற்ற 4 பேர் திருச்சி ஆயுதப்படை போலீசிலும் பணி புரிந்து வருகின்றனர்.

இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


ரூ. 2,000 லஞ்சம்: மின் வாரிய அலுவலர்கள் இருவர் கைது


சாத்தையாறு அணை பகுதியில் வசிக்கும் சின்னவீரன் என்பவர், தாட்கோ திட்டத்தில் வழங்கப்பட்ட நிலத்திற்கு இலவச மின்சாரம் கேட்டு, மனைவி கிருஷ்ணம்மாள் பெயரில் சமயநல்லூர் தலைமை செயற்பொறியாளருக்கு மனு செய்திருந்தார்.

25ம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுதாரரை அழைத்த செயற்பொறியாளராக இருந்த கென்னடி, "உங்களுக்கு விவசாயத்திற்காக இலவச மின்சாரம் தர அரசு உத்தரவு வந்துள்ளது. அதற்காக 5,000 ரூபாய் தரவேண்டும்' என கேட்டார். "2,000 ரூபாய் மட்டுமே தரமுடியும்' என்று கூறிய சின்னவீரன், லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார்.

திட்டமிட்டபடி நேற்று காலை 11.45 மணிக்கு, மதுரை லஞ்ச ஒழிப்பு குழுவினர், பாலமேடு மின்வாரிய அலுவலகம் வந்தனர். சின்னவீரன் கொடுத்த 2,000 ரூபாயில், 1,500 ரூபாயை, தான் எடுத்துக் கொண்டு, கமர்சியல் இன்ஸ்பெக்டர் சுப்பன் என்பவரிடம் 500 ரூபாயை தந்தபோது, போலீசார், இரண்டு பேரையும் கைது செய்தனர்.

லஞ்சம் வாங்கிய வன அதிகாரிகள் 2 பேர் கைது


குமரி மாவட்டம் பேச்சிப்பாறை கீழமாறாமலை கிராமத்தை சேர்ந்தவர் தங்கதுரை(62). இவருக்கு பேச்சிப்பாறை அணை அருகே நிலம் உள்ளது. இந்த நிலத்துக்கு செல்லும் வழித்தடம் வனத்துறைக்கு உட்பட்ட பகுதியில் வருகிறது.

எனவே, இந்த பாதை வழியாக தனது நிலத்துக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று குலசேகரம் வனச்சரக அலுவலகத்தில் தங்கதுரை மனு கொடுத்தார். இதற்கு அனுமதி அளிக்க வேண்டுமானால், வனச்சரகருக்கு ரூ.5 ஆயிரமும், வனவருக்கு ரூ.2 ஆயிரமும் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளனர்.

இதுபற்றி
குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் தங்கதுரை புகார் செய்தார். டி.எஸ்.பி. சுந்தர்ராஜ் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் கண்ணன், பீட்டர்பால் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் இரவு குலசேகரம் சென்றனர். அப்போது, வன அலுவலகத்துக்குள் சென்ற தங்கதுரை, ரூ.5 ஆயிரத்தை வனச்சரகர் மனோகரனிடமும், ரூ.2 ஆயிரத்தை வனவர் மோகனிடமும் கொடுத்துள்ளார்.

அப்போது
, அங்கு பதுங்கியிருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கைது செய்தனர். இதையடுத்து, அவர்களது வீடுகளிலும் சோதனை நடந்தது. கைதான இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நாகர்கோவில் கிளை சிறையில் நேற்று அடைக்கப்பட்டனர்.

02 பிப்ரவரி 2010

நெல்லை:வருவாய் ஆய்வாளருக்கு சிறை



நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரை சேர்ந்த நரசிம்மன்(37). இவர் சிவகிரி தாலுகா அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணியாற்றுகிறார்.

இவரிடம் அதே பகுதியை சேர்ந்த விவசாயி தங்கப்பழம் என்பவர், தமது தோட்டத்திற்கு தண்ணீர் எடுத்துச்செல்ல பைப்லைனை பொதுப்பாதை வழியாக அமைக்க அனுமதி கோரினார். அதற்கு வருவாய் ஆய்வாளர் 5 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டார். பணம் தர விரும்பாத தங்கப்பழம், நெல்லை லஞ்சஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

கடந்த 2004 அக்டோபர் 18ம் தேதி போலீசார் சிவகிரி தாலுகா அலுவலகம் வந்தனர். தங்கப்பழத்திடம் இருநுஅத லஞ்சப்பணம் 5 ஆயிரத்தை வாங்கிய வருவாய் ஆய்வாளர் நரசிம்மனை போலீசார் கைது செய்தனர்.

வழக்கு நெல்லை சி.ஜெ.எம்.,கோர்ட்டில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி பொன் பிரகாஷ், நரசிம்மனுக்கு ஒரு ஆண்டு சிறையும் 2 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்தார்.


ரூ.7 கோடி ஏமாற்றி விட்டனர்: போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் வடிவேலு பரபரப்பு புகார்


காமெடி நடிகர் வடிவேலு சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்துக்கு இன்று மதியம் 12 மணிக்கு வந்தார். அவர் மத்திய குற்றப்பிரிவு துணை கமிஷனர் ஸ்ரீதரை சந்தித்து புகார் தெரிவித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- நான் சினிமாவில் சம்பாதித்த பணத்தை ரியல் எஸ்டேட் தொழிலில் முதலீடு செய்தால் லாபம் கிடைக்கும் என என்னிடம் ஆசை காட்டினார்கள். அதை நம்பி முன்பின் அனுபவம் இல்லாத ரியல் எஸ்டேட் தொழிலில் இறங்கினேன்.

புதிதாக நிலங்கள் வாங்கி தருவதாக சொல்லி அவ்வப்போது கொஞ்சம் கொஞ்சமாக ரூ.7 கோடி முதல் பணம் வாங்கிக் கொண்டனர். என்னை மோசடி செய்யும் விதமாக அரசுக்கு சொந்தமான சுடுகாட்டு நிலங்களையும், புறம்போக்கு நிலங்களையும் போலி ஆவணம் தயாரித்து என்னிடம் விற்று விட்டனர்.

இதற்கு சில நில புரோக்கர்கள் உடந்தையாக இருந்துள்ளார்கள். மோசடி செய்த பணத்தை திருப்பி கேட்டபோது ரவுடிகளை வைத்து மிரட்டுகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தரவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.


அவரிடம் தகுந்த ஆதாரங்களுடன் புகார் மனுவுடன் வரும்படி கூறினார்.பின்னர் வடிவேலு நிருபர்களிடம் கூறியதாவது:- மாலையில் உங்களை சந்தித்து முழு விவரங்களையும் கூறுகிறேன் என்று தெரிவித்தார்.

லஞ்ச புகார்:​ பாப்பாக்குடி இன்ஸ்பெக்டருக்கு கட்டாய ஓய்வு


பாப்பாக்குடி இன்ஸ்பெக்டர் லஞ்சம் பெறுவதாக வந்த புகார்களையடுத்து,​​ அவருக்கு கட்டாய ஓய்வு அளித்து திருநெல்வேலி சரக டி.ஐ.ஜி.​ பெ.​ கண்ணப்பன் உத்தரவிட்டார்.​ ​

திருநெல்வேலி மாவட்டம்,​​ பாப்பாக்குடி போலீஸ் நிலையத்தில் இன்ஸ்பெக்டராக பணியாற்றியவர் சுந்தரமகாலிங்கம் ​(54).​ ​ ​ ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த நிலத் தரகர் சுப்பிரமணியனுக்கும்,​​ பாளையங்கோட்டையைச் சேர்ந்த நிலத் தரகர் மனோகருக்கும் இடையே தொழில்ரீதியாக முன்பகை இருந்தது.​ ​

இதனிடையே,​​ சுப்பிரமணியன் கடந்த 1}8}2006 ஆம் தேதி பாப்பாக்குடி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்,​​ மனோகர் மீது இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம் வழக்குத் தொடர்ந்தார்.​ ​

இதனால்,​​ அதிர்ச்சியடைந்த மனோகர்,​​ மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தன் மீது பொய் வழக்குத் தொடரப்பட்டிருப்பதாகவும்,​​ அது குறித்து விசாரணை நடத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.​ மனுவை விசாரித்த நீதிமன்றம்,​​ திருநெல்வேலி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஸ்ராகர்க் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டது.​ ​ அந்த உத்தரவின் அடிப்படையில் ஆஸ்ராகர்க் நீதிமன்றத்தில் ஆஜரானார்.​

மனோகரன் மனு மீது விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கும்படி எஸ்.பி.க்கு,​​ நீதிமன்றம் உத்தரவிட்டது.​ அதன்பேரில் ஆஸ்ராகர்க் விசாரணை செய்தார்.​ ​ விசாரணையில்,​​ இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கம்,​​ அவ் வழக்கின் புகார்தாரர் சுப்பிரமணியத்திடம் லஞ்சம் வாங்கிக் கொண்டு பொய் வழக்குபதிவு செய்திருப்பது கண்டறியப்பட்டது.​ ​

உடனே டி.ஐ.ஜி.​ பெ.​ கண்ணப்பன்,​​ இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கத்தை நவம்பர் மாதம் 4 ஆம் தேதி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.​ மேலும்,​​ சுந்தரமகாலிங்கம் பணியாற்றிய இடங்களில் அவர் மீதான முறைகேடுகள் குறித்து ஆஸ்ராகர்க் விசாரணை மேற்கொண்டார்.​ ​ இதில் சுந்தரமகாலிங்கம் 2003 ஆம் ஆண்டில்,​​ சாத்தான்குளம் காவல் நிலையத்தில் பணியாற்றியபோது,​​ ஒரு வழக்கில் லஞ்சம் பெற்றுக் கொண்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாமலிருந்தது கண்டறியப்பட்டது.​

இதையடுத்து,​​ பணியிடை நீக்கத்தில் இருந்த இன்ஸ்பெக்டர் சுந்தரமகாலிங்கத்துக்கு கட்டாய ஓய்வு அளித்து டி.ஐ.ஜி.​ கண்ணப்பன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டார்.


ரூ.2500 லஞ்சம்:கள்ளக்குறிச்சி மின்வாரிய வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ் கைது


விழுப்புரம்: கள்ளக்குறிச்சியில் மின் இணைப்பு வழங்க ரூ.2,500 லஞ்சம் வாங்கிய மின்வாரிய வணிக ஆய்வாளர் கைது செய்யப்பட்டார்.

கள்ளக்குறிச்சி புதுவீட்டுச்சந்து தெருவைச் சேர்ந்தவர் பக்தவச்சலம் (வயது 40). இவர் கள்ளக்குறிச்சியில் மொபைல் கடை நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி அருகில் உள்ள நீலமங்கலத்தில் வீடு கட்டும் பணியை துவக்கிய பக்தவச்சலம், மூன்று மாதங்களுக்கு முன் உதவி மின்சார பொறியாளர் அலுவலகத்தில் மின் இணைப்பு கோரி விண்ணப்பித்திருந்தார்.

மின் கம்பம் நடவேண்டும் என்று கடந்த 29ந் தேதி அழைக்கப்பட்ட தால் பக்தவச்சலம் கள்ளக்குறிச்சியில் உள்ள மின்வாரிய அலுவலகத்திற்கு சென்றார். அங்கு பணிபுரியும் கள்ளக் குறிச்சியைச் சேர்ந்த மின்வாரிய வணிக ஆய்வாளர் கோவிந்தராஜ் (வயது 42) என்பவர் ரூ.2,500 லஞ்சம் கேட்டுள்ளார்.

பக்தவச்சலம் விழுப்புரத்தில் உள்ள லஞ்ச ஒழிப்பு துறை போலீசாருக்கு புகார் கொடுத்தார். அவர்கள் எடுத்த நடவடிக்கையில் கோவிந்தராஜ் கைது செய்யப்பட்டார்.

01 பிப்ரவரி 2010

காவ‌ல்துறை ஆணைய‌ர் போனு‌க்கு 1000 புகா‌ர்க‌ள்




‘‘காவ‌
ல‌ர்‌க‌ள் லஞ்சமகேட்டாலஅல்லதகாவலதுறதொடர்பாபிரசசனைகளஇருந்தால், நேரடியாஎனதசெல்போன98409 83832 என்எண்ணிலதொடர்பகொள்ளலாம்’என்று காவ‌ல்துறை ஆணைய‌ர் ராஜேந்திரனநேற்றமுன்தினமஅறிவித்தார்.


இந்
அறிவிப்பமக்களிடமஅமோவரவேற்பபெற்றதுட‌ன் நேற்றஒரநாளிலஆயிரத்துக்குமமேற்பட்டவர்களஆணைய‌ர் தொலைபேசி எண்ணதொடர்பகொண்டபுகார்களதெரிவித்துள்ளனர். அவற்றிலபெரும்பாலும் காவ‌ல்துறசம்பந்தமாகுறைகளஇருந்ததாக ஆணைய‌ர் தெரிவித்தார்.


காவல
துறையினசெயல்பாடுகளுக்கபலரபாராட்டுமதெரிவித்தனர். சென்னமட்டுமல்லாமல் அய‌ல்நாட்டிலஇருந்துமஅழைப்பவந்தது. அனைத்தஅழைப்புகளுக்கும் ஆணைய‌‌ர் ராஜேந்திரனபதிலஅளித்தார்.


பொத
மக்களகூறிபுகார்களகுறித்தஉடனடியாவிசாரணநடத்தி நடவடிக்கஎடுக்க காவ‌ல்துறை அதிகாரிகளுக்கு ஆணைய‌ர் ராஜே‌ந்‌திர‌ன் உத்தரவிட்டுள்ளார்.

ஜே.பி.ஜே. நிறுவன சொத்துக்கள் முடக்கம்



ஜே.பி.ஜே. நிறுவனத்தின் ரூ.10 கோடி சொத்து முடக்கப்பட்டுள்ளதாக கூடுதல் டி.ஜி.பி. திலகவதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தமிழக பொருளாதார குற்றப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. திலகவதி,

ஜே.பி.ஜே. சிட்டி டெவலப்பர்ஸ் ரியல் எஸ்டேட் நிறுவனம் மோசடி செய்து விட்டதாக 2233 பேர் இதுவரை புகார் கொடுத்துள்ளனர். அதன் பேரில் சென்னை, காஞ்சீபுரம், திருச்சி, திருவள்ளூர், திருவாருர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, செங்கல்பட்டு, கோவை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் அலுவலகங்களில் 8 தனிப்படைகளின் மூலம் தீவிர சோதனை நடத்தப்பட்டது.

இதில் 219 இடங்களுக்கான நில ஆவணங்கள், 4 சொகுசு கார்கள், 1 மோட்டார் சைக்கிள், ரூ.2 லட்சம் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. ரூ.10 கோடி மதிப்புள்ள ஜே.பி.ஜே. நிறுவனத்தின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.25 கோடியே 89 லட்சத்து 76 ஆயிரத்து 50 ரூபாய் மோசடி செய்துள்ளதாக புகார் வந்துள்ளது.

இந்த வழக்கில் ஜஸ்டின் தேவதாஸ் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார். அதற்கு அடுத்தபடியாக அவரது மனைவி பெல்லா ஜஸ்டின், சாமுவேல்நடேசன் ஆகிய இருவரையும் போலீசார் தேடி வருகின்றனர். இவர்களது பாஸ் போர்ட்டுகள் முடக்கப்பட்டுள்ளது.

ஜஸ்டின் தேவதாஸ் தனது அலுவலக உள் அலங்கார வேலைக்கு மட்டும் ரூ.1 கோடி செலவு செய்துள்ளார். எங்களது முக்கிய குறிக்கோள் பணத்தை இழந்த முதலீட்டாளர்களுக்கு அதை மீட்டுக்கொடுப்பதுதான். அதைவிடுத்து இந்த மோசடியின் பின்னணியில் வி.ஐ.பி.க்கள் இருக்கிறார்களா? யார் யாருக்கு தொடர்பு இருக்கிறது. என்று விசாரித்து வழக்கை வளர்ப்பதற்கு விரும்பவில்லை. மறைமுகமாக இந்த மோசடியில் தொடர்புள்ள ஏஜெண்டுகளிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. ஜஸ்டின் தேவதாஸ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் நிலமில்லாத ஏழை மக்களுக்கு நிலம் வழங்கி நல்லது செய்ய நினைத்தேன். ஏஜெண்டுகள் என்னை ஏமாற்றியதால் இப்படி ஒரு தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கவைத்து விட்டனர் என்று கூறியுள்ளார்.

செங்குன்றம் அடுத்த பெருங்காவூரில் உள்ள 200 பிளாட்டுகளை 25 ஆயிரம் பேருக்கு விற்பதற்காக
காட்டியுள்ளனர். தொடர்ந்து இதில் சம்பந்தப்பட்ட நபர்களிடம் விசாரித்து வருகிறோம்.